Pages

21/7/14

தாம்பூலத்தட்டு



தேவையான பொருட்கள்
  1. பழைய காலண் டர் அட்டை 
  2. பெவிகால்
  3. சில்க் காட்டன் துணி 
  4.  மூங்கில் குச்சிகள் (ஓரத்தில் ஒட்டுவதற்கு )
  5. ஜரிகை ரிப்பன்
  6. சமிக்கி
காலண் டர் அட்டை மீது பெவிகால் தடவி அதன் மேல் சில்க் காட்டன் துணி
ஐ  பிசுறு இல்லாமல் நன்கு ஒட்டின பிறகு  மூங்கில் குச்சிகளின் மீது ஜரிகை ரிப்பனை சுற்றி ஓரங்களில் ஒட்டி விட வேண்டும். ஓரங்களில்  சமிக்கிகளை ஒட்டி விட்டு ஒரு நாள் முழுக்க காய்ந்தால்  தம்பூலத்தட்டு ரெடி .

23/8/13

கோலப்போட்டி

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா வீட்டுக்கு போய் இருந்தேன். ஒரு நாள் மாலையில் ஒருவர் வந்து நாளைக்கு வைஷ்ணவா  கல்லூரியில்  இருந்து நம்ம சிவன் கோவிலுக்கு உழவாரப்பணி செய்ய மாணவிகள் வராங்க . அப்படியே நம்ம ஊர்ல ஒரு கோலப் போட்டி நடத்த  யோசிச்சு இருக்காங்களாம். எல்லாரும் போட்டிக்கு கோலம் ரெடி செஞ்சிகோங்க ன்னு சொல்லிட்டு  போனார்.கோல புக் எதுவும் கைல இல்ல . கலர் பொடி இல்ல .மறு நாள் பக்கத்துக்கு வீட்டு அக்கா கலர் பொடி குடுத்தாங்க . முருகரோட வாகனம் மயில் போட் டேன்.
டைம் ஆச்சு . கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் புடை சூழ வந்து பார்த்துட்டு போனாங்க.கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் வந்து மூன்றாம் பரிசு உங்க கோலத்துக்கு ன்னுஒரு இன்ப செய்தி குடுத்தாங்க.உடனே பக்கத்துக்கு வீட்டு அக்காக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன். 

1/9/12

Nail Art

நெயில் ஆர்ட் மேல ரொம்ப ஆர்வம் வரவே வீட்டில் இருக்கும் things ஐ வைத்து ட்ரை செய்தேன் .
                  தேவையான பொருட்கள் .
1. Nail polish
2. Acrylic colours
3. Nail polish remover
4. Paint brush small size
5. Glass colour nail polish
6. Glitter tube


Nail polish remover  கொண்டு நகங்களை துடைத்து
விட்டு  nailpolish  ஐ  Apply செய்து பின்பு  Acrylic colours ஐ பெயிண்ட் brush இன் அடி முனையால் நமக்கு பிடித்தமான டிசைன் போட வேண்டியதுதான்.
நன்றாக காய்ந்தவுடன் Glass colour nail polish  போட வேண்டும் . Glitter tube கொண்டு விரும்பினால் கொஞ்சம் decorate செய்து கொள்ளலாம் .

11/8/12

மெஹந்தி டிசைன்

 எங்க அண்ணிக்கு நான் போட்ட டிசைன்

18/3/12

யானை கோலம்

வீட்டு வாசலில் குட்டியா ஒரு  கோலம் போடலாம் னு தோனவே
குட்டி யானை போட்டேன்.கலர் குடுக்க  time இல்ல    .அதனால வெள்ளை யானை.

14/2/12

கோலங்கள்

பொங்கலுக்கு வீட்டு வாசலில் நெறைய கோலங்கள் போட்டோம்.
பிரியா ராம் பொங்கல் கு போட்ட கோலங்களை அப்டேட் பண்ண சொல்லி இருந்தாங்க. டைம் இல்ல, இப்போ தான்  டைம் கிடைச்சுது  அதனால அப்டேட் பண்ணி இருக்கேன்



11/1/12

கோலம்

நியூ இயர் க்கு எங்க வீட்டு வாசலில் நான் போட்ட கலர்  கோலம்