Pages

21/7/14

தாம்பூலத்தட்டு



தேவையான பொருட்கள்
  1. பழைய காலண் டர் அட்டை 
  2. பெவிகால்
  3. சில்க் காட்டன் துணி 
  4.  மூங்கில் குச்சிகள் (ஓரத்தில் ஒட்டுவதற்கு )
  5. ஜரிகை ரிப்பன்
  6. சமிக்கி
காலண் டர் அட்டை மீது பெவிகால் தடவி அதன் மேல் சில்க் காட்டன் துணி
ஐ  பிசுறு இல்லாமல் நன்கு ஒட்டின பிறகு  மூங்கில் குச்சிகளின் மீது ஜரிகை ரிப்பனை சுற்றி ஓரங்களில் ஒட்டி விட வேண்டும். ஓரங்களில்  சமிக்கிகளை ஒட்டி விட்டு ஒரு நாள் முழுக்க காய்ந்தால்  தம்பூலத்தட்டு ரெடி .

23/8/13

கோலப்போட்டி

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா வீட்டுக்கு போய் இருந்தேன். ஒரு நாள் மாலையில் ஒருவர் வந்து நாளைக்கு வைஷ்ணவா  கல்லூரியில்  இருந்து நம்ம சிவன் கோவிலுக்கு உழவாரப்பணி செய்ய மாணவிகள் வராங்க . அப்படியே நம்ம ஊர்ல ஒரு கோலப் போட்டி நடத்த  யோசிச்சு இருக்காங்களாம். எல்லாரும் போட்டிக்கு கோலம் ரெடி செஞ்சிகோங்க ன்னு சொல்லிட்டு  போனார்.கோல புக் எதுவும் கைல இல்ல . கலர் பொடி இல்ல .மறு நாள் பக்கத்துக்கு வீட்டு அக்கா கலர் பொடி குடுத்தாங்க . முருகரோட வாகனம் மயில் போட் டேன்.
டைம் ஆச்சு . கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் புடை சூழ வந்து பார்த்துட்டு போனாங்க.கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் வந்து மூன்றாம் பரிசு உங்க கோலத்துக்கு ன்னுஒரு இன்ப செய்தி குடுத்தாங்க.உடனே பக்கத்துக்கு வீட்டு அக்காக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன். 

1/9/12

Nail Art

நெயில் ஆர்ட் மேல ரொம்ப ஆர்வம் வரவே வீட்டில் இருக்கும் things ஐ வைத்து ட்ரை செய்தேன் .
                  தேவையான பொருட்கள் .
1. Nail polish
2. Acrylic colours
3. Nail polish remover
4. Paint brush small size
5. Glass colour nail polish
6. Glitter tube


Nail polish remover  கொண்டு நகங்களை துடைத்து
விட்டு  nailpolish  ஐ  Apply செய்து பின்பு  Acrylic colours ஐ பெயிண்ட் brush இன் அடி முனையால் நமக்கு பிடித்தமான டிசைன் போட வேண்டியதுதான்.
நன்றாக காய்ந்தவுடன் Glass colour nail polish  போட வேண்டும் . Glitter tube கொண்டு விரும்பினால் கொஞ்சம் decorate செய்து கொள்ளலாம் .

11/8/12

மெஹந்தி டிசைன்

 எங்க அண்ணிக்கு நான் போட்ட டிசைன்

18/3/12

யானை கோலம்

வீட்டு வாசலில் குட்டியா ஒரு  கோலம் போடலாம் னு தோனவே
குட்டி யானை போட்டேன்.கலர் குடுக்க  time இல்ல    .அதனால வெள்ளை யானை.

14/2/12

கோலங்கள்

பொங்கலுக்கு வீட்டு வாசலில் நெறைய கோலங்கள் போட்டோம்.
பிரியா ராம் பொங்கல் கு போட்ட கோலங்களை அப்டேட் பண்ண சொல்லி இருந்தாங்க. டைம் இல்ல, இப்போ தான்  டைம் கிடைச்சுது  அதனால அப்டேட் பண்ணி இருக்கேன்



11/1/12

கோலம்

நியூ இயர் க்கு எங்க வீட்டு வாசலில் நான் போட்ட கலர்  கோலம்

29/12/11

மெஹந்தி

நான் என்னோட தங்கைக்கு போட்ட மெஹந்தி டிசைன் .
இது quick மெஹந்தி.டிசைன் போட்டு  பத்து நிமிஷத்துல பத்திடும் .
 

21/4/11

Pot Painting

ஒரு முறை.நாங்க மட்கா குல்பி  வாங்கினோம் ..
அப்பபோ ஐஸ்கிரீம்  ஐ இந்த பானையில் தந்தாங்க.
அப்பறமா பானைல பெயிண்ட் பண்ணலாம் னு தோணவே
அதை எடுத்து வெச்சிஇருந்தேன்.மெதுவா ஒரு வருஷதுக்கு
அப்பறம் இப்போ தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெயிண்ட் பண்நேன்.
பெயிண்ட்டிங்  எல்லாம் முறையா தெரியாது. சும்மா எனக்கு தெரிஞ்சத
பண்ணி இருக்கேன்.

             
                                         
                                      


9/4/11

Mehandi Design

என் தங்கைக்கு  நான் போட்ட மருதாணி டிசைன் .

6/3/11

பேல்பூரி

 ரொம்ப நாளைக்கு அப்பறம் நான் எழுதறதுனால சிம்பிள் ஆன ரெசிபி யோட ஸ்டார்ட் பண்றேன்,

பேல் பூரி 

வெங்காயம்               1 
தக்காளி                       1 
பொறி                            2  கப் 
மல்லி                            தேவைக்கு
மிக்ஸ்சர்                      1  கப் 
பச்சைமிளகாய்          1 (சிறியது)
ஓம்பொடி                     1/2 கப்
சாஸ்                              கொஞ்சம் 
சாட்மசாலா                 சிறிதளவு 
உப்பு                               தேவைக்கு 

செய்முறை 

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி ,மல்லி ,மிளகாய் கூடபொறி ,சாஸ் ,சாட்மசாலா , உப்பு ,மிக்ஸ்சர்,ஓம்பொடி சேர்த்து நன்றாக கலந்தால் பேல்பூரி தயார்.


14/7/10

எங்க வீட்ல பூத்த பூ

எங்க வீட்ல தோட்டம் இல்ல .
அதனால வாசல்ல இருக்க கொஞ்ச  எடத்துல
பூ செடிகள் மட்டும் கொஞ்சம் வாங்கி
நட்டோம் .அதற்கு தினமும் வீட்டில் யாராவது
தண்ணீர் விடுவோம் , உரதிர்ற்கு வெங்காய தோல் ,பூண்டு தோல்
என்று  கொஞ்சம் போடுவோம்.தினமும் பூ பூத்து இருக்கானு
பாத்துகிட்டே இருப்போம்.அப்போ பூத்த முதல் பூ இது தான்.(அரளி)
 

இந்த பூ இப்போ தான் மொட்டு விட்டு இருக்கு (நந்தியாவட்டை)
                                                             இது பாரிஜாதம்

இது செம்பருத்தி 

 
இந்த செடிகள் எல்லாம் பூத்ததும்  அதெல்லாம் அடுத்த பதிவில்



7/7/10

களவாணி

களவாணி படம் ,நானும் என் கணவரும் நேத்து போனோம் .
ரொம்ப நாள் க்கு அப்புறம், படம் ரொம்ப பிடிச்சி இருந்தது. full காமெடி ஸ்டோரி. சிரிச்சிகிட்டே இருந்தோம்
போகும் போது evening நல்ல climate .
கொஞ்ச தூரம் போனதும் lite ஆ தூரல் வேற,போட்டுது.
.ECR ல இயற்கை ஐ ரசிச்சிகிட்டே..போனோம்
 இந்த மாதிரி படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு.
படத்தில்  எல்லாருமே நல்லா நடிச்சிஇருந்தாங்க.
கஞ்சா கருப்பு வரும் எல்லா   சீன் ல  யும் காமெடி தான்.
நல்ல படம் பார்த்த திருப்தி.
நன்றி .படம் உதவி:கூகுள் இமேஜஸ்

29/6/10

தேர் திருவிழா

எங்க  ஊர் ல தேர் திருவிழா ரொம்ப சூப்பர் ஆ இருக்கும்.    
மதுராந்தகம் கோதண்டராமர் சுவாமி திருக்கோவில்.நெறைய கடைகள் , ராட்டினம், மெஹந்தி போட கடைகள் ,குட்டி பசங்களுக்கு நெறைய  விளையாட்டு பொருட்கள் னு ஒரே சூப்பர் ஆ இருக்கும். வீட்டு பெரியவர்களிடம் தேர் காசு என்று தனியாக collection வேறு . ராட்டினம் சுற்றி , ஐஸ் கிரீம் சாப்ட்டு ,இன்னும் என்ன என்ன வாங்க  வேண்டுமோ வேண்டியதை வாங்கி கொண்டு வீடு திரும்புவோம் .
அப்பறம் காலையில் சுவாமி தேர் ல் வருவார்.ஊரே கூடி தேர் இழுப்போம் . பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள்வார் .


22/6/10

வெள்ளை குந்தன் நெக்லஸ்

வெள்ளை குந்தன் மற்றும் சிகப்பு லோரிலஸ் கொண்டு
இந்த நெக்லஸ் யை  செய்தேன்.


16/6/10

பச்சை குன்தன் & முத்து லோரியல்ஸ் நெக்லஸ்

இந்த fancy jewel பச்சை குந்தன் கற்கள் மற்றும்
முத்து லோரியல்ஸ் கொண்டு செய்தேன்.

15/6/10

முத்து மாலை


வெள்ளை முத்துக்களால் செய்த மாலை இது.


14/6/10

மல்டி கலர் லோரியல்ஸ் நெக்லஸ்

நான் செய்த மற்றுமொரு பேன்சி ஜ்வல்லரி .
இதை  பல வண்ண லோரியல்ஸ்கள் கொண்டு  செய்தேன்.


13/6/10

மெரூன் &முத்து மாலை

பேன்சி ஜ்வல்ஸ் செய்வது  ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு .
 மெரூன் மற்றும் முத்துக்களால் செய்த மாலை .





A simple Mehandi Design.

ஹாய் ,
எனக்கு மெஹந்தி டிசைன்ஸ் என்றால் ரொம்ப இஷ்டம்.
அப்பப்போ நானே எனக்கு போட்டுக் கொள்வேன்.
நான் ட்ரை பண்ண இரண்டாவது டிசைன் இது.